Breaking News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, மார்ச் 10-

கடல்சார் ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் இன்று மாலை 4 மணிக்கு செலுத்தப்பட்டது.


கடல்சார் ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன் படி ஏற்கனவே 5 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது, 1,425 கிலோ எடை கொண்ட 6 ஆவது செயற்கைகோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எப்யை பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்து சென்ற காட்சியை பெரும்பாலான சென்னை மக்கள் பார்க்க முடிந்தது.

No comments

Thank you for your comments