Breaking News

14 வயது கைப்பந்து வீராங்கனை வெட்டிக்கொலை

கொல்கத்தாவில் கைப்பந்து வீராங்கனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா அருகே உள்ள பரசத் பகுதி அருகே நேற்று இரவு பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் உள்ளூர் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சங்கீதா ஆயிச் என்ற 14 வயது மாணவியும் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.

அப்போது கைப்பந்து மைதானத்திற்கு வந்த சுப்ரதா சிங்கா என்ற ராஜா (19) சங்கீதாவிடம், ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க சங்கிதா மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த ராஜா, சங்கிதாவை இருக்கையை பிடித்து கீழே தள்ளிவிட்டு தாக்க முற்பட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த சக இளைஞர்கள் சங்கிதாவுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சங்கிதா, மைதானத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த தனது இல்லம் நோக்கி ஓடியுள்ளார்.

அதற்குள் அவரை துரத்தி பிடித்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடியுள்ளார்.

மேலும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.

தற்போது ராஜாவை கைது செய்ய போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments