தேர்தல் விதிமுறைகள் குறித்து ராஜேஷ் லக்கானி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
சென்னை, மார்ச் 26-
தேர்தல் செலவீனம், நடத்தை விதிமுறைகள் ஆகியவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் செலவீனங்கள் குறித்தும், வேட்பாளர் செலவு செய்யும் பணத்திற்கு எப்படி கணக்கு வைப்பது உட்பட பல விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றியும், சமூக வலைத்தள பிரச்சார விதிமீறல்கள் பற்றியும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக மே மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 19-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
No comments
Thank you for your comments