Breaking News

அமெரிக்கர்களை தட்டிக்கேட்ட இந்திய பிரதமர்!

சுதந்திரப் போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி, தனது ஆட்சிக்காலத்தில் நல்ல சில நடவடிக்கைகளை எடுத்தார்.  அதுபற்றி இக்கால அரசியல்வாதிகள் அறிவதும் மக்கள் நல பணிக்கான தூண்டுதலே.

பிறந்தநாள் பந்தம்

இந்தியாவின் தந்தையான மகாத்மா
காந்தியின் மீது ஆழ்ந்த பற்றுடையவரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ம் தேதிதான். சாஸ்திரி பிறந்த ஆண்டு 1904.

அதுமட்டுமல்ல காந்தியடிகளின் 111 வது ஜெயந்தி விழாவில், இனி எனது பிறந்த நாளையும் காந்தி ஜெயந்தியோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என அறிவித்தார்.

சாஸ்திரியின் மகத்தான 5 மாற்றங்கள் வரலாற்று சிறப்பானது,

ஜெய் ஜவான் ஜெய் கிஷான்

சாஸ்திரி உதிர்த்த முத்து மொழிகளில் முதன்மையானது. ’ஜெய் ஜவான் ஜெய் கிஷான்’ இந்த வாசகத்திற்கு பின்னால் ஒரு உணர்வுப்பூர்வமான சந்தர்ப்பம் இருந்தது.

லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரான சமயத்தில் (1964), இந்தியாவுக்குத் தேவையான உணவு தானியங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டது.

வட அமெரிக்காவிலிருந்து PL-480 திட்டத்தின் கீழ் தனக்கு தேவையான உணவுப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்துவந்தது. இந்நிலையில் 1965 ல் பாகிஸ்தானோடு போர் செய்ய வேண்டிய நிர்பந்தமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

அதனால், மக்களுக்கு உணவு திண்டாட்டமும் ஏற்பட்டது. சாஸ்திரி ராணுவ வீரர்களைப் பற்றியும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்திருந்தார். ஒருநாள் நாட்டுக்காக விரதம் இருக்கவும் மக்களை கேட்டுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில்தான் 'போர் வீரர்களின் வெற்றி விவசாயிகளின் வெற்றி’ என்பதை ஹிந்தியில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஷான்’ என்று உணர்வு முழக்கமிட்டார்.

பிற நாட்டுக்காக தட்டிக்கேட்ட பிரதமர்

1965 ம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சூழலில், அமெரிக்க பத்திரிகையாளருடனான ஒரு பேட்டியில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஆதிக்கம் காரணமாகவே வியட்நாமில் போர் ஏற்பட்டுள்ளது என்பதை தைரியமாக சொன்னார்.

உணவு இறக்குமதிக்கு அமெரிக்காவை நம்பியிருக்கிறோம் என்பதை ஒரு பிரதமராக அறிந்திருந்தும் அப்படிச் சொன்னார். மனசாட்சி உள்ளவர்கள் உண்மைக்கு மதிப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் சொன்னார்

ஆனால் மாறாக, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சனோடு சாஸ்திரிக்கு கருத்து மோதல் ஏற்பட்டது.

அதனால், உண்மைக்கும் மனசாட்சிக்கும் மதிப்பளிக்காத அமெரிக்கா கோபமடைந்து ’Stop go Policy' கொள்கை அடிப்படையில் இந்தியாவுக்கு அளித்து வந்த உணவு இறக்குமதியை நிறுத்திவிட்டது.

இதனால், அப்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணாத இந்தியா, ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் மீண்டும் ஏற்றுமதிகளை தொடர மேல்முறையீடு செய்ய வேண்டியிருந்தது.

ஜாதி அமைப்பை நம்பாதவர்

வாரணாசியில் உள்ள ராம்நகரில் கயாஸ்தா குடும்பத்தில் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தார். இவர் ஜாதி அமைப்பை விரும்பாததால் பெயருக்கு பின்னால் எதையும் சேர்க்காமலே இருந்தார்.

பிறகு, காசி வித்யாபீத்தில் பட்டம் பெற்றபோது இந்த சாஸ்திரி பட்டம் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது.

போக்குவரத்தில் பெண் நடத்துனர்

முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சராக சாஸ்திரி பணிசெய்தார்.

அப்போது போக்குவரத்தில் பெண்களை நடத்துனர்களாக இந்தியாவில் முதன்முறையாக பணியமர்த்தினார்.

கூட்டத்தை கலைக்க நீர் பீய்ச்சியடித்தல்

பொதுயிடங்களில் கூட்டம் ஆர்ப்பாட்டம் என பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்கு காவலர்கள் லத்தியால் அடிப்பதுதான் ஆங்கிலேயரிடமிருந்து நாம் கற்றிருந்தோம்.

நம் மக்களை அடித்து காயப்படுத்தி விரட்டுவதற்கு பதிலாக நீரை வேகமாக பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைக்கும் மென்முறையை கொண்டுவந்தார்.

மக்களை தன் உறவாக பார்க்கும் மனோபாவம் இதில் வெளிப்பட்டுள்ளது.

பிரதமராக முதல் பேச்சு

பாரதத்தின் பிரதமராக பெரிய பொறுப்பில் இருக்கும் நமக்கு, இந்த நாட்டின் எதிர்கால இலக்கு, அதை அடைய பயணிக்கும் பாதை என, சிந்தித்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாம் நாற்சந்தியில் நிற்கிறோம் எந்த சாலையில் செல்வது இடதுபக்கமா வலதுபக்கமா என்ற தடுமாற்றம் இருப்பது இயல்பு. ஆனால், அந்த தடுமாற்றமே நமக்கு இல்லை நம்முடைய பாதையும் இலக்கும் தெளிவாக உள்ளது.

சோசலிசமான குடியரசுதான் நமது முதல் கட்டமைப்பு. சுதந்திரமும் செழிப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைப்பது.

உலக அமைதியில் இந்தியாவின் பங்களிப்பு. மற்ற நாடுகளோடு நட்பு போன்ற கொள்கைகளை அடிப்படையாக பின்பற்றுவது என பேசினார்.

தொடரும் சீர்திருத்தங்கள்

போக்குவரத்துத் துறையில் இருந்ததால் சாலை மற்றும் சந்திகளை தன் கருத்துக்கு உவமையாக கையாண்டார். இது அவருடைய பணிசார்ந்த ஈடுபாடு. அது பிரதமர் பதவியிலும் இருந்தது.

சிக்கனமும் எளிமையும் அவருக்கு பிடித்த விஷயங்கள். பிரதமராக இருக்கும்போதே 1966 ஜனவரி 11 ம் தேதி இயற்கை எய்தினார்.

சில சிறந்த தலைவர்களுடைய ஆட்சிக்குப் பிறகும் ஒரு நாட்டில் சீர்திருத்தப்பட வேண்டிய சீர்கேடுகள் விளைவது, ஒரு நாட்டின் பயணமே!

No comments

Thank you for your comments