Breaking News

வேலூர் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.நந்தகோபால், பார்வையிட்டார்



வேலூர், மார்ச் 4- 
தமிழகம் முழுவதும் இன்று (04.03.2016) பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கள் இன்று தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வேலூர்  மாவட்டத்தில் மேல்நிலை பொதுத் தேர்வுகள் 145 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை 20,000 மாணவர்களும் 22,748 மாணவிகளும் மொத்தம் 42,748  பேர் எழுதுகின்றனர். இத்தேர்விற்காக 3025 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு  மையங்களுக்கும் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் நியமன சலுகையும், 39 மாணவர்கள் தேர்வு  எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்  கல்வி மாவட்டத்தில் 10 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும், வேலூர்  கல்வி மாவட்டத்தில் 12 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 37 வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களிலிருந்து அனைத்து தேர்வு  மையங்களுக்கும் வினாத்தாட்களை கொண்டு சென்று தேர்வு கள் முடிந்த பின்னர் மீண்டும் தேர்வு  மையங்களிலிருந்து விடைத்தாட்களை சேகரித்து விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு வர உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு  மையங்களிலும் நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள தெரிவித்தார் .
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  மு.விஜயக்குமார்  மற்றும் தேர்வு  மைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments