Breaking News

ஐ.எஸ் அமைப்பிற்கு செல்: மூளை சரியில்லாதவருக்கு மூளைச்சலவை செய்த மருத்துவர்

ஜெர்மன், மார்ச் 4-
ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் மனநலம் சரியில்லாத நபரை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணையுமாறு மூளைச்சலவை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 24 வயதுடைய ஜிகாதி
ஒருவர் ஈராக்கில் 12 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளார், மேலும் தற்கொலை படை தாக்குதலுக்கு தயாரான இவர், போலிசாரிடம் சிக்கியுள்ளார்.

இவரிடம் விசாரணை நடத்தியதில், இவர் மனநலம் சரியில்லாதாவர் என்று தெரியவந்துள்ளது, மேலும் விசாரணை வளையத்தினை முடுக்கிவிட்ட போலிசாருக்கு இவர் மருத்துவர் ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் Mannheim நகரில் மருத்துவராக பணியாற்றும் அந்நபரை, அவரது குடியிருப்பில் வைத்து கைது செய்துள்ள போலிசார், அவரிடம் இருந்து கைப்பேசிகள், ஆவணங்கள், மின்னனு தரவு சேமிப்பு சாதனங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் அந்த நோயாளிக்கு சிரியாவில் இருந்து ஈராக்கிற்கு செல்வதற்கான பயணச்சீட்டுகளை எடுத்துகொடுத்துள்ளார், மேலும் ஐ,எஸ் குறித்து தகவல்களை அந்நபரிடம் கூறியதன் விளைவாக அவரும் ஐ,எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியாவை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments