Breaking News

காலில் குண்டு பாய்ந்த நிலையில் செங்கம் இளைஞர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி

சென்னை, பிப்.22:
Man admitted in Chennai govt hospitalசென்னையில் துப்பாக்கிகுண்டுகள் பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு கால்களிலும் துப்பாக்கிகுண்டுகள் பாய்ந்த நிலையில் செங்கம் பக்தியைச் சேர்ந்த சக்தி தாசன் என்கின்ற அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு சுயநினைவு இல்லாத காரணத்தினால் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு விவரங்கள் தெரியாத காரணத்தினால் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments