Breaking News

ஆட்டோ ஓட்டுநரின் நல்ல உள்ளம்! தங்க நகைகளை ஒப்படைத்தார்

மும்பை, பிப்.22:
மும்பையில் ஆட்டோவில் சென்ற பெண் பயணி தவறவிட்ட தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மும்பை பைகுல்லா பகுதியில் வசிக்கும் சஞ்சனா குப்தா என்ற பெண் நேற்று மாலை ஒரு ஆட்டோவில் ஏறி போரிவாலி ரயில் நிலையத்துக்கு
சென்றுள்ளார்.

அவர் சென்ற பிறகு தான் இருக்கையில் ஒரு கைப்பை இருப்பதை ஆட்டோ ஓட்டுனர் கைலாஷ் யாதவ் (55) பார்த்துள்ளார். அதை திறந்துப் பார்த்த போது அதனுள் தாலிச்சரடு உள்பட சில தங்க நகைகள் இருப்பதை கண்டுள்ளார்.

இதையடுத்து அவர் அதனை கஸ்தூர்பா மார்க் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதற்குள் நகைகளை தவறவிட்ட சஞ்சனா இதுதொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளார். 

போலிசார் அந்த பெண்மணியை அழைத்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த நகைகளை ஒப்படைத்துள்ளனர்.
நகைகளை திருட நினைக்காமல் போலிஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை கஸ்தூர்பா மார்க் போலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
மேலும், நகைகளை திரும்பப் பெற்றுக்கொண்ட சஞ்சனாவும் ஓட்டுனரிடம் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments