எலெக்ஷன் பூத்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் வசதிகள்- தேர்தல் ஆணையம்!
சென்னை, பிப்.24:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மாற்றுத்திறனாளி
வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து விவாதிக்க உள்ளோம். மாற்றுத்திறனாளி
வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் பல்வேறு வசதிகள் செய்துதர இருக்கிறோம்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள் வைக்கப்படும். ஒரு இடத்தில்
100 மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அங்கு தனியாக ஒரு வாக்குச்சாவடி
அமைக்கப்படும்.
தேர்தல் கமிஷனின் இலவச போன் எண் 1950 என்ற எண்ணில்
மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக ஒரு நட்சத்திர குறியீட்டை
புகுத்தியிருக்கிறோம். அதன் மூலம் அவர்கள் தகவல்கள் பெறலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு, அதாவது ஜனவரி 20க்கு பிறகு
மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்களால்
62 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று
தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments