டெல்லியில் 5 மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம்... ராஜேஷ் லக்கானி பங்கேற்பு
டெல்லியில் இன்று தமிழகம் உட்பட ஐந்து மாநில தலைமை தேர்தல்
அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
ராஜேஷ் லக்கானி பங்கேற்கிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், மே மாத இறுதிக்குள் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று முதல் இரண்டு நாட்கள் டெல்லியில் மேற்கூறிய
ஐந்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. தலைமை
தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
முதல் நாள் கூட்டத்தில், ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு
செய்ய வேண்டிய, சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குறித்து, ராஜேஷ் லக்கானி
விளக்குகிறார்.
இரண்டாம் நாளான நாளை சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள ஐந்து
மாநிலங்களிலும், மத்திய போலீஸ் படை, துணை ராணுவ வீரர்கள் எவ்வளவு பேரை,
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இது மட்டுமின்றி, இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தலை எத்தனை
கட்டங்களாக நடத்துவது, எந்தத் தேதியில் நடத்துவது என்பது குறித்தும்
இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
No comments
Thank you for your comments