”வணக்கம் இது கதிமான் எக்ஸ்பிரஸ்”- இனி ரயிலும் உங்களை வரவேற்கப் போகும் “ட்ரெயின் ஹோஸ்டஸ்”!
டெல்லி, பிப்.22:
டெல்லி - ஆக்ரா இடையே அடுத்த மாதம் இயக்கப்பட இருக்கும் கதிமான் எக்ஸ்பிரஸ்
இந்தப் புதிய ரயில் குறித்த அறிவிப்பு வரும் 25 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் வெளியிடப்பட இருக்கிறது.
கதிமான் எக்ஸ்பிரஸ்
இதுகுறித்த அறிவிப்பில், "கதிமான் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் அதிகவேகமாக அதாவது 160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய ரயிலாகும். இந்தியாவின் முதல் "செமி ஹை ஸ்பீடு" ரயிலான இதில் அவசரகால "பிரேக்"வசதி, தானியங்கி தீ எச்சரிக்கைக் கருவி, ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் வசதி, "ஸ்லைடு" கதவுகள், நேரலை வசதியுடன் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டபணிப்பெண்கள்வை அடங்கும்.
ரயில் பணிப்பெண்கள்
ரயில் பணிப்பெண்கள்
இவை அனைத்தையும்விட கூடுதலாக பயணிகளுக்கு வசதி செய்து தரும் வகையில் இந்த ரயிலில் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் பயணிகளை ரோஜாப் பூ கொடுத்து வரவேற்பது முதல் பயணித்தின்போது தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.
வடக்கும், தெற்கும்
வடக்கும், தெற்கும்
உணவுப் பட்டியலில் கோதுமை உப்புமா, மினி தோசை, காஞ்சிபுரம் இட்லி, பல்வேறு வகை பழங்கள், ஸ்விஸ் ரோல், சிக்கன் சாஸ், சிக்கன் ரோல், ஸ்பானிஷ் முட்டை உணவு, ஒயிட் ஆம்லேட், உலர் பழங்கள், வால்நட் கேக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 12 பெட்டிகள்
மொத்தம் 12 பெட்டிகள்
12 பெட்டிகள் கொண்ட ரயிலில் டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ள ஆக்ராவுக்கு 105 நிமிடங்களில் செல்லும். சதாப்தி ரயிலில் சென்றால் சுமார் 120 நிமிடங்கள் வரை ஆகும்.
கட்டண விவரம்
கட்டண விவரம்
முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் இருக்கை வசதி பயணக் கட்டணம் ரூபாய் 690, சிறப்பு வகுப்புக் கட்டணம் ரூபாய்1,365 ஆகும். அதே நேரத்தில் டெல்லி-ஆக்ரா இடையே பயணம் செய்ய சதாப்தி ரயிலில் இருக்கை வசதி பயணக் கட்டணம் ரூபாய் 540, சிறப்பு வகுப்புக் கட்டணம் ரூபாய் 1,040 ஆகும்.
மேலும் நகரங்கள்
மேலும் நகரங்கள்
இதேபோன்ற கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னை-ஹைதராபாத், கான்பூர்-டெல்லி, சண்டிகர்-டெல்லி, நாகபுரி-பிலாஸ்பூர், கோவா-மும்பை, நாகபுரி-செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments
Thank you for your comments