Breaking News

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி திருவண்ணாமலையைச் சேர்ந்த 21 பேர் திருப்பதியில் கைது

திருப்பதி, பிப்.22:
21 திருப்பதி, பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி அருகே பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி வாகனங்களில் கடத்துவதாக பாக்ராப்பேட்டை போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் பாக்ராப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கைதானவர் கொடுத்த தகவலின் படி பாக்ராப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ராமச்சந்திராபுரம் மண்டலம் பி.வி.புரம் அருகே குண்டாலஏரி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் செம்மரம் வெட்டும் கும்பல் தப்பி ஓடியதாம்.

இதில் 21 பேரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனராம். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 10 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனராம்.

கூலித்தொழிலாளிகளை திருவண்ணாமலையை சேர்ந்த பன்னீர், முருகன் ஆகியோர் பாக்ராப்பேட்டை வனப்பகுதிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். தெரிய வருகிறது. 2 தரகர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சமீப காலமாக தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என்று கூறி ஆந்திர போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்களையும் கைது செய்ததாக சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

No comments

Thank you for your comments