Breaking News

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு

Magnitude 4.9 quake hits near Bakersfield, Californiaபேக்கர்ஸ்பீல்டு, பிப்.24:
கலிபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியிருந்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில் இருந்து 38.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 1,000 அடி ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் கல்போர்னியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

சான்டா பார்பரா, வென்டுரா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரமும் இதே அளவிலான நிலநடுக்கம் மத்திய கலிபோர்னியா பகுதியில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments