தமிழக முதல்வருக்கு கொங்குநாடு விவசாயிகள் சார்பில் நன்றி.
விவசாய போரட்டத்தில் உயிரிழந்த 40 விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அறிவித்த
தமிழக முதல்வருக்கு கொங்குநாடு விவசாயிகள் சார்பில் நன்றி.
ஈரோட்டியில் நேற்று நடந்த விவசாயிகள் மாநாட்டில் மின்சார கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி, விவசாயிகளுக்காக உயிரிழந்த விவசாயிகளை தியாகிகளாக அரசு அறிவிக்க வேண்டும். அவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைத்து மாநாட்டில் இந்த தீர்மானத்தையும் சேர்க்க வேண்டுமென்று வலியுறுத்தினேன். 1970 – 1980 -களில் விவசாய போராட்டத்தின் போது உயிரிழந்த 40 விவசாய குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் என இன்று சட்டசபையில் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதேபோன்று கடந்த கோவை தேர்தல் பிரசாரத்தின்போது நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கூறியிருந்ததை, இன்று வையம்பாளையத்தில் கட்டப்படும் என்ற அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்காக போராடி, இன்றும் விவசாயிகள் மனதில் மறையாத முகமாக திகழ்கிறார். அத்தகைய மனிதருக்கு மணிமண்டபம் அமைக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கொங்கு மண்டல விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான பல்வேறு நீர்பாசன திட்டங்களான பாண்டியாறு-புன்னம்புழா திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், திருமணி-முத்தாறு திட்டம், ஆனைமலை - நல்லாறு திட்டம் போன்ற 5௦ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதை நிறைவேற்ற வேண்டும்.
No comments
Thank you for your comments