தமிழ்நாட்டில் அவசரநிலை நடவடிக்கை குழு பயன்படுத்தும் 45 அதி நவீன வண்டிகளை முத்தூட்பாப்பச்சன் குழுமம் அறிமுகம்
நாட்டில் முதல் முறையாக 133 அதி நவீன வண்டிகளை (ATV) முத்தூட் பாப்பச்சன் குழுமம் வழங்குகிறது
தமிழ்நாட்டில் கார்பொரேட் நிறுவனங்களின் அவசரநிலை நடவடிக்கை குழு (ETR) பயன்படுத்தும் 45 அதி நவீனவண்டிகளை (ATV) 129-ஆண்டு நிறுவனமான முத்தூட் பாப்பச்சன் குழுமம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 133 அதி நவீன வண்டிகளை (ATV) முத்தூட் பாப்பச்சன் குழுமம் அறிமுகம்செய்யவுள்ளது. அதன் முதல் பகுதியாக 45 வண்டிகளை முத்தூட் பாப்பச்சன் குழுமம் வழங்கியுள்ளது. எல்லைபாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் திரு ராமன் ஸ்ரீவத்சவ் இத்திட்டத்தை சென்னையில் துவக்கிவைத்தார்.
அதி நவீன தகவல் தொடர்பு மற்றும் செயல் திறன், தொழில் நுட்ப கடுங்கண்காணிப்பு கொண்ட இந்த அதி நவீன வண்டிகளை (ATV) கார்பொரேட் நிறுவனங்கள் பயன்படுத்தினால் பாதுகாப்பு செலவுகள் 50 சதவிகிதம் குறையும்.
இதற்கென முத்தூட் பாப்பச்சன் குழுமம் MPG பாதுகாப்பு குழுமம் எனும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் பணிபுரிப்பவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
20,000 கோடி தனியார் பாதுகாப்பு துறை வர்த்தகத்தில் முத்தூட் பாப்பச்சன் குழுமம் அடி எடுத்து உள்ளது. இத்திட்டம்கேரளா, தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் துவங்கியுள்ளது. படிப்படியாக இத்திட்டம்டெல்லி, உத்தர் பிரதேஷம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்படும்.
படம் : எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் திரு ராமன் ஸ்ரீவத்சவ் முத்தூட் பாப்பச்சன் குழுமம்அறிமுகம் செய்யும் தொழில் நுட்ப கடுங்கண்காணிப்பு அதி நவீன வண்டிகள் (ATV) திட்டத்தை சென்னையில்துவக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments