Breaking News

பிரதமர் மோடி-நேபாள பிரதமர் சந்திப்பில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி, பிப்.20:
இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர், மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசியுள்ளார். 

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி 6 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்தடைந்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், இருதரப்பு
உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும், நேபாளத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பின்னர் இந்தியா-நேபாளம் இடையே கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம், போக்குவரத்து, மின்துறை உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும், இருநாடுகள் இடையே 400 கிலோ வாட் மின் பகிர்மான திட்டத்தை பிரதமர் மோடியும் கேபி ஷர்மா ஒலியும் துவங்கி வைத்துள்ளனர்.

நிருபர்களிடம் பேசிய நேபாள பிரதமர், இந்தியா- நேபாளம் இடையேயான உறவில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மனக்கசப்பை நீக்கவே இந்தியா வந்தேன்.

பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பேசுகையில், நேபாளம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து துரித வளர்ச்சிக்கு உதவும்.
நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஏற்பட வேண்டும் என இந்தியா எப்போதும் விரும்புகிறது.

நேபாளத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறுவதற்கு சாத்தியமுள்ள உதவிகளை இந்தியா செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் நேபாள பிரதமர், வரும் 24ம் தேதி இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் திரும்ப உள்ளார்.

No comments

Thank you for your comments