வாணியம்பாடி கொடையாஞ்சியில் சாமுண்டீஸ்வரியம்மன் கோயிலில் புதைக்கப்பட்ட அம்மன் சிலையை மீட்கும் போது சீறிவந்த பாம்பு…
வாணியம்பாடி, பிப்.26:
வாணியம்பாடியில் கொடையாஞ்சி கிராமம் உள்ளது. இந்த ஊர் மிகவும் பிரசித்தம் பெற்ற ஊராகும். இதன் மறுபெயர் கொடைகாசி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு முன்னோர்களுக்கு வழிபாடு செய்து வழிபடுவது என கால காலமாக மக்கள் வணங்கி வருகின்றனர்.
அதேபோல மணலால் லிங்கம் செய்து அதற்கு பூஜைசெய்து பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதும், இறந்துபோனவர்களின் அஸ்தியை பாலாற்றில் கரைத்து, புனித நீராடி, சிவனை வழிபடுவதும், தலைமுறை தலைமுறை காலமாக நடந்து வரும் மரபாகும்.
இதேபோல பிரசித்தி பெற்ற இன்னொரு ேகாயிலும் உள்ளது. சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்தான் அது. இந்தக் கோயில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிசேகமும் நடந்தது. இருப்பினும் கடந்த 5
ஆண்டுகளாக எவ்விதமான பூஜைகளோ, திருவிழாவோ, பிரார்த்தனை நேர்த்திகளோ நடை பெறாமல் தடையாகவே இருந்து வந்தது. இதற்கு காரணம் என்னவென்று கண்டு பிடிக்கமுடியாமலேயே இருந்து வந்தது. பின்னர் ஒருசிலருக்கு அருள்வந்து அதில்
சிலநபர்கள் அம்மன் சிலையை கோயிலுக்குள் வைத்து புதைத்துவிட்டதால் எந்தவித வழிபாடும் செய்ய முடியாதபடி ஆகிவிட்டது என தெரியவந்தது.
இந்நிலையில், ஊர்பொதுமக்கள் முன்னிலையில் கோயிலுக்குள் புதைக்கப்பட்ட சிலையை தோண்டிஎடுத்தனர். உள்ளே இருந்த சிலை நல்ல நிலையிேலயே மேலுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் உரிய பூஜைகளை முறைப்படி செய்து, பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். மேலும் 2 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சீறிப்பாய்ந்து வந்ததைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இந்தக்கோயிலைப்பற்றி முதியவர் ஒருவர் கூறியதாவது, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக்கோயில் அருகே பகல் நேரத்தில் இடி விழுந்தது எனவும், அப்போது இந்த பகுதி முழுவதும் சேதாரமானதால் இந்த சிலையை மண்ணில் மறைத்து வைத்தனர் எனவும், மண்ணில் மறைத்துவைத்த 11 பேர் கொண்ட குழுவில் 6 பேர் செத்துப்போய்விட்டார்கள் எனவும், அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். மேலும், இந்தசிலை நாயக்கர் கால சிலை எனவும் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.
No comments
Thank you for your comments