Breaking News

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: பாதுகாப்பை அதிகப்படுத்திய பேஸ்புக் நிறுவனர்

 கலிபோர்னியா, பிப்.26:
ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பேஸ்புக் நிறுவனர் தமது பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தலைமை நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டிருந்தனர்.


இந்நிலையில் பேஸ்புக் தலைமை நிர்வாகியான மார்க் ஜுக்கர்பர்க் கலிபோர்னியாவில் அமைந்துள்ள தமது 7 மில்லியன் டொலர் மதிப்புள்ள குடியிருப்புக்கு பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று, தமது சொந்த பாதுகாப்புக்காக ஐவர் குழு ஒன்றையும் புதிதாய் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தொழில்முறை பயணமாக ஜேர்மனி சென்றிருக்கும் ஜுக்கர்பர்க்குடன் இந்த ஐவர் பாதுகாப்பு குழுவும் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஐ.எஸ்.குழுவினர் விடுத்திருந்த கொலை மிரட்டல் வீடியோவில், பேஸ்புக் பக்கத்தில் தங்களுக்கு 10,000 கணக்குகள் இருப்பதாகவும்,
150 பேஸ்புக் குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகவும், 5,000 டுவிட்டர் கணக்குகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும், தங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களில் ஒருவரது கணக்கை பேஸ்புக் நீக்கினால், புதிதாய் 10 கணக்குகள் துவங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

No comments

Thank you for your comments