உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி மீட்பு
உத்தரபிரதேசம், பிப்.13:
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், பிரபல
தனியார் ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’-ன் கிளையில் அப்பகுதியை
சேர்ந்த தீப்தி சர்னா பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர் ஆட்டோ
ஒன்றில் சென்று கொண்டிருந்தார். பாதி வழியில் அந்த ஆட்டோ பழுதடைந்ததை
அடுத்து பிற பயணிகள் மற்றொரு ஆட்டோ மூலம் பேருந்து நிலையம் சென்றனர்.
ஆனால் அந்த ஆட்டோவில் இருந்த 4 பேர் சேர்ந்து தீப்தியை கத்திமுனையில் கடத்தி சென்றுள்ளனர்.
இதற்கிடையே தீப்தியின் செல்போனுக்கு பேசிய ஒரு தோழி, தீப்தியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக காசியாபாத் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலிசார் தீப்தியை தீவிரமாக தேட தொடங்கினர்.
இதனிடையே கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், நெருக்கடி காரணமாக டெல்லிக்கு
செல்லும் புறநகர் ரெயில் ஒன்றில் தீப்தியை ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரும், போலிசாரும் சேர்ந்து தீப்தியை பத்திரமாக மீட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments