Breaking News

முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நாளை 168 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்!

வேலூர், பிப்.22:
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் வேலூரில் நாளை 168 அடி கேக் வெட்டி, வாண வேடிக்கையுடன்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (23ம் தேதி), வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் காலை 10 மணிக்கு 168 அடி கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.
அத்துடன் வாண வேடிக்கையும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை கேக் வெட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில், திருச்சி எம்பியும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப.குமார், வேலூர் தொகுதி எம்பி செங்குட்டுவன், வேலூர் தொகுதி எம்எல்ஏ மருத்துவர் வி.எஸ்.விஜய், வேலூர் மேயர் கார்த்தியாயினி மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். 


இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.டி.ஆர்.ரகு பிரமாண்டமாகச் செய்து வருகிறார்.

No comments

Thank you for your comments