மின் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்
பிரிட்டன், பிப்.24:
பிரிட்டனில் Oxfordshire பகுதியில் அமைந்துள்ள டிட்காட் மின் நிலையத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மின் நிலையத்தில் செயல்பட்டு வந்த 2 கொதிகலன்களை அப்புறப்படுத்தும் நோக்கில் சில பணியாளர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மின் நிலையத்தின் ஒருபகுதி திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 3 பணியாளர்கள் மாயமானதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து
தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை
மீட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 5 நபர்களையும் மீட்டு அவர்களுக்கு முதலுதவி
அளித்த பின்னர் ஆக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில்
அனுமதித்துள்ளனர்.
இதனிடையே மின் நிலையத்தின் சுற்றுவட்டாரப்பகுதியில் அமைந்துள்ள
குடியிருப்புவாசிகளை பாதுகாப்பு கருதி வெளியேற வேண்டாம் என
எச்சரித்துள்ளனர்.
நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் எதுவும் அந்த மின் நிலையத்தில் இல்லை
என்றபோதும் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட புகை அப்பகுதியை
சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
1970-ல் துவங்கப்பட்ட இந்த மின் நிலையம் தற்போது தகர்த்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments