Breaking News

நேபாளத்தில் 21 பேருடன் சிறிய ரக விமானம் மாயம் : தேடும் பணி தீவிரம்

Passenger plane missing in Nepalகாத்மாண்டு, பிப்.24:
நேபாளத்தில் 21 பேருடன் கிளம்பிய சிறிய ரக விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகோரா என்ற நகரில் இருந்து 21 பேருடன் தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று ஜோஸோமுக்கு புதன்கிழமை கிளம்பியது.

போகோராவில் இருந்து ஜோஸோம் செல்ல 18 நிமிடம் ஆகும். இந்நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. போகோரா மற்றும் ஜோஸோம் இடையே விமானம் தரையிறங்கும் வசதி இல்லை.

இந்நிலையில் மாயமான விமானத்தை பல ஹெலிகாப்டர்கள் மணிக்கணக்கில் தேடியும் கிடைக்கவில்லை. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணியை தொடர முடியாமல் உள்ளது.

இந்நிலையில் மியாக்தி மாவட்டத்தில் உள்ள ராம்சி என்ற கிராமத்தில் ஏதோ ஒரு பொருள் வானில் இருந்து எரிந்து வந்து விழுந்துள்ளது. அந்த பொருள் மாயமான விமானமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

1949ம் ஆண்டில் இருந்து இதுவரை நேபாளத்தில் 70க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்துகளில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments