Breaking News

வாணியம்பாடி அம்பலுாரில் மினிமாரத்தான் போட்டி: பள்ளிக் கல்லுாரி மாணவர்கள் 400 பேர் பங்கேற்பு...

வாணியம்பாடி, பிப் 29:
வாணியம்பாடி அடுத்த  அம்பலுார் அரசு மேல் நிலைப்பள்ளி  பழைய மாணவர்கள்  மற்றும் இரட்டை மலை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து பூமி வெப்பமாவதை தடுக்க, கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நடுதல் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை
  நடத்தியது.

நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிக்கு,  பழைய மாணவர் சங்கத் தலைவர்  இரவீந்திரன் தலைமை வகித்தார்.  சமூக நல அறக்கட்டளை செயலாளர் பார்த்தீபன் வரவேற்றுப்பேசினார். கல்வியாளர் ஜனகல்யாண் சரவணன் முன்னிலை வகித்தார்.  தொழிலதிபர்  ஆர் .ஆர்.வாசு போட்டியை தொடங்கிவைத்தார் .

8 கி.மீ., துார ஓட்டப்பந்தயம் அம்பலுார் அரசு  மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, கொடையாஞ்சி, சங்கராபுரம், எக்லாஸ்புரம் வழியாக, மீண்டும் பள்ளியை அடைந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து, சுமார் 400 பேர் பங்கு கொண்ட இப்போட்டியில், முதல் பரிசினை வாணியம்பாடி இசுலாமியாக் கல்லுாரி மாணவா் ஹரி கிருஷ்ணன் என்பவரும், 2ஆம் பரிசினை சென்னை செயிண்ட் ஜோசப் கல்லுாரி மாணவா் சதீஷ் குமார் என்பவரும், 3 ஆம் பரிசினை பொன்னேரி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவா் யுவக்குமார்  என்பவரும்  பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களுக்கு, ஏலகிரி சக்தி அம்மா பரிசுகள் வழங்கி, வாழ்த்திப் பேசினார். வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளரும், அம்பலுார் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளருமான, ராஜசேகா் சான்றிதழ்களை வழங்கி பாராட்டிப் பேசினார்.  முடிவில் கண்ணன் நன்றி  கூறினார். 

இவ்விழாவில், நிகழ்சி தொகுப்பாளர் சுப்பிரமணி, நிகழ்சி ஓருங்கிணைப்பாளர் ராஜ்குமார், பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் வெங்கடேசன், சமுக ஆா்வலா்கள் இந்துமதி, எம் ஞானதாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

படச்செய்தி
வாணியம்பாடி அம்பலுாரில் நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, ஏலகிரி சக்தி அம்மா பரிசுகள் வழங்கினார்.உடன் தொழிலதிபா் ஆா். ஆா். வாசு, சரவணன் உள்ளனா்.

  

No comments

Thank you for your comments