2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!
டெல்லி, பிப்.29:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி
ரயில்வே பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2016-17-ம்
ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் மதியம் 11 மணிக்கு தாக்கல்
செய்யப்படுகிறது.
நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
அரசின் 3வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது புதிய வரிகள்,
வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளித்து நாட்டின் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனிநபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது.
விலைவாசி உயர்ந்து செலவுகள் அதிகரித்து இருப்பதால் இந்த வரிவிலக்கு
உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச்சம்பளம் பெறுவோர்
மத்தியில் உள்ளது. எனவே இதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறலாம்
என்று தெரிகிறது.
வேளாண்மை துறைக்கு சில சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த
ஆண்டு சேவை வரி 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதைபோல இந்த ஆண்டும் சேவை வரி
உயர்த்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
No comments
Thank you for your comments