Breaking News

வேலூர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிறந்தநாள் விழா: 3069 பால்குட ஊர்வலம், அன்னதானம் வேலூரை குலுங்கச் செய்த அதிமுக தொழிலதிபர் ஜிஜிஆர்

வேலூர், பிப்.22:
வேலூர் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக தொழிலதிபர் ஜிஜிஆர் தலைமையில் 3039 பால்குட ஊர்வலம் மற்றும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியால் வேலூர் நகரமே குலுங்கியது.



  
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்வேளையில் வேலூர் அதிமுக தொழிலதிபரும், ஜிஜிஆர் பொறியியல் கல்லூரி சேர்மனும், வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜிஜிஆர் (எ) ஜி.ஜி.ரவி தலைமையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணியளவில் வேலூர் காந்தி வீதியில் இருந்து 3069 பால்குட ஊர்வலம் புறப்பட்டு லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட் வழியாக கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் நிறைவு பெற்றது. அங்கு பாலாபிஷேகம் நடந்தது. பால்குட ஊர்வலத்தை திரைப்பட நடிகரும், முன்னாள் எம்பியும், தலைமை கழக பேச்சாளருமான மக்கள் நாயகன் ராமராஜன் தொடங்கி வைத்தார்.

கோயில் வளாகத்தில் பாலாபிஷேகம் முடிந்ததும் 3000 பேருக்கு அன்னதானம் (பிரிஞ்சி சாதம்) வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி வாயிலாக வேலூர் நகரமே குலுங்கும் வகையில் பால்குட ஊர்வலம் நடத்தி காண்போரை பிரமிப்படையச் செய்தார் ஜிஜிஆர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.முனியம்மாள், காட்பாடி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார், வேலூர் மாநகராட்சி 28வது வார்டு பாசறை செயலாளர் ஜி.ஆர்.கோகுல், பொறியாளர் ஜி.ஆர்.தமிழ்மணி, முன்னாள் மகளிரணி நகர செயலாளர் சாரதா, வி.ஜி.ஹரிதுளசிராமன், காட்பாடி கே.ஜி.குட்டி (எ) தீனதயாளன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments