Breaking News

தேர்தல் நெருங்கும் நிலையில் 21 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு

சென்னை, பிப்.17:
21 inspectors promoted as dsps சட்டசபைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் விரல்ரேகைப் பிரிவைச் சேர்ந்த 21 இன்ஸ்பெக்டர்களுக்கு திடீரென பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டது.

விரல்ரேகைப் பிரிவில் பணியாற்றும் 21 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பதவி உயர்வை அளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இவர்களின் விவரம்: கன்னியாகுமரி ஏ.எம்.ஜோதி, புதுக்கோட்டை எம்.ஹேமா, சென்னை ஆர்.மாலதி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, வி.பஞ்சாட்சரம்,ஈரோடு டி.சங்கீதா, திருவண்ணாமலை ஆர்.சுந்தரராஜன், நாமக்கல் ஆர்.ரஞ்சனி ஆகிய 8 பேர் அந்தந்த மாவட்டங்களிலேயே கைரேகைப் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மற்ற 13 பேரும் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்க உள்ளனர்.

No comments

Thank you for your comments