Breaking News

கருணை கொலை குறித்து பாராளுமன்றம் இறுதி முடிவு எடுக்கட்டும்: உச்சநீதிமன்றம் கருத்து

Image result for supreme courtடெல்லி, பிப்.16:
கருணைக் கொலையை சட்டப் பூர்வமாக்குவது தொடர்பாக பாராளுமன்றமோ அல்லது மக்கள் நீதிமன்றமோ தான் இறுதி நீதிபதியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காமன் காஸ் என்ற அரசு சாரா அமைப்பு,
கருணைக் கொலையை அனுமதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது, அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும், அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் பி.எஸ்.பட்வாலியாவும் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது, கருணைக் கொலையை சட்டப் பூர்வமாக்குவது தொடர்பாக எந்த கட்டத்தில், நோயாளியின் உயிர் காக்கும் சாதனங்களை நீக்குவது; உயிருடன் இருக்கையில் இறப்பது குறித்து எழுதிய உயிலை நிறைவேற்றுதல் போன்றவை குறித்து, பாராளுமன்றத்தில் தான் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் பாராளுமன்றமோ அல்லது மக்கள் நீதிமன்றமோ தான் இறுதி நீதிபதியாக இருக்கும் என்று நீதிபதிகள் அமர்வு கருத்து கூறியுள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 20-ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments

Thank you for your comments