ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, ரட்வன்ஸ்கா அரை இறுதிக்கு தகுதி
மெல்போர்ன், ஜன. 26:
நம்பர் ஒன் வீராங்கனை செரீனாவின் அபாரமான ஆட்டத்துக்கு முன்பு 5–வது இடத்தில் இருக்கும் ஷரபோவாவின் ஆட்டம் எடுபடவில்லை. செரீனா 6–4, 6–1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் ஷரபோவா இறுதிப் போட்டியில் அவரிடம் தோற்று இருந்தார். இந்த முறை கால்இறுதியிலேயே அவரிடம் தோற்று வெளியேறினார்.
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 4–ம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்கா (போலந்து)– 10–ம் நிலை வீராங்கனை கார்லா (ஸ்பெயின்) மோதினார்கள்.
இதில் ரட்வன்ஸ்கா 6–1, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2–வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு 2014–ம் ஆண்டும் தகுதி பெற்று இருந்தார்.
அரை இறுதி ஆட்டத்தில் செரீனா– ரட்வன்ஸ்கா மோதுகிறார்கள். நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் கெர்பர் (ஜெர்மனி)– அசரென்கா (பெலாரஸ்), ஜோகன்னா– சுயாய் ஜங் (சீனா) மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் மோதும் வீரர்கள் விவரம்:–
1. ஜோகோவிச் (செர் பியா)– நிஷி கோரி (ஜப்பான்).
2. பெடரர் (சுவிட்சர் லாந்து)– தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு).
3. ரோனிக் (கனடா)– மான்பில்ஸ் (பிரான்ஸ்).
4. ஆன்டி முர்ரே (இங்கி லாந்து)– டேவிட் பெரர் (ஸ்பெயின்).
No comments
Thank you for your comments