Breaking News

நாடு முழுவதும் 18 லட்சம் போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

டெல்லி, ஜன.27:



பல முதல்முறையாக சம்பவங்களுக்கு பிள்ளையார்சுழி போட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கடமையாற்றும் 18 லட்சம் போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் பங்கேற்ற கருத்தரங்கம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடைநிலை முதல் உயர்நிலை வரை நாட்டிலுள்ள அனைத்து போலீசாரையும் நான் தனிப்பட்ட முறையில் வாழ்த்தவும், பாராட்டவும் விரும்புகிறேன்.

எனவே, உங்கள் மாநிலங்களில் கடமையாற்றும் போலீசாரின் கைபேசி எண்களையும் சேகரித்து, வரும் ஜனவரி மாதம் 25-ம் தேதிக்குள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வையுங்கள் என கேட்டுக்கொண்டிருந்தார்.

அவ்வாறு கிடைத்த கைபேசி எண்களுக்கு மத்திய அரசின் எஸ்.எம்.எஸ். தொகுப்பில் இருந்து நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட அந்த வாழ்த்து செய்தியில்’ ‘இனிய குடியரசு தின வாழ்த்துகள். உங்களைப் போன்ற போலீசாரின் வீரத்துக்கும் சேவைக்கு தலைவணங்குகிறேன்என மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த எஸ்.எம்.எஸ். உடன் பிரதமரின் முக்கிய உரைகள் அடங்கிய தொகுப்புகளை அறிந்துகொள்வதற்கான ஒருலிங்க்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டிராய்ட் கைபேசிகளை வைத்திருப்பவர்கள் அந்த இணைப்பின் மூலம் பிரதமரின் முக்கிய உரைகள் மற்றும் நிகழ்ச்சிகளை காணலாம்.

No comments

Thank you for your comments