"ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ. 1.20 லட்சம் வரை அரசு மானியம்!" - காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு ஆட்சியர் சினேகா அறிவிப்பு!
காஞ்சிபுரம் | நவம்பர் 25, 2026
60% வரை மானியம் & பயனாளிகளுக்கான முக்கியத் தகுதிகள்
"நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள நீர்ப்பாசன வசதியில்லாத விவசாயிகளுக்குப் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, நிகர சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 21 ஆழ்துளைக் கிணறுகள் இலக்காகப் பெறப்பட்டுள்ளது."
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கான தகுதிகள் மற்றும் மானிய விவரங்கள்:
நில உடைமை & வகை: பாதுகாப்பான குறுவட்டங்களில், நிலையான நீர்ப்பாசன வசதி இல்லாத புஞ்சை நிலம் சொந்தமாக வைத்துள்ள இதரப்பிரிவு (General Category) விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் பெயரில் ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் (கூட்டுப் பட்டாதாரராக இருத்தல் கூடாது).
பழைய கிணறுகள் உள்ள நிலங்கள்: நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத அல்லது தூர்ந்துபோன கிணறுகள் கொண்ட புஞ்சை நில விவசாயிகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். கள ஆய்வின் போது எவ்விதப் பாசனக் கிணறும் பயன்பாட்டில் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே நிலநீர் ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்படும்.
பின்னேற்பு மானிய விவரம்:
- சிறு, குறு பெண் விவசாயிகள்: 60 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 1.20 லட்சம் வரை வழங்கப்படும்.
- இதர விவசாயிகள்: 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 1.00 லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கீழ்க்கண்ட அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா கேட்டுக் கொண்டுள்ளார்:
அலுவலக முகவரி: செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631502.
தொடர்பு எண்:9003090440

No comments
Thank you for your comments