Breaking News

"காஞ்சிபுரத்தில் 3.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி!" - 2 அமைச்சர்கள் மரம் நட்டுத் தொடங்கி வைத்தனர்!


காஞ்சிபுரம் | நவம்பர் 25, 2026

ஊரகப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரித்துப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் 3.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் 155 கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைச் செறிவூட்டும் பணிகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் இன்று (நவ. 25) தொடங்கி வைத்தனர்.


ஒன்றிய வாரியாக 3.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

"சாலையோரங்கள், நீர்நிலைக் கரைகள் மற்றும் அரசு வளாகங்களில் மகாலி மரம், தேக்கு, புங்கம், பூவரசம், பாதாம், வேப்பமரம் போன்ற வட்டார நாற்றங்கால் பண்ணையில் 5 அடி வரை நன்கு வளர்ந்த பழம் தரும் மற்றும் பொருளாதாரப் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன."

ராகு-கேது பெயர்ச்சி 
[2026 to 2028] 

18 மாதம்- யாருக்கு ராஜயோகம்?

👑 எந்த ராசிக்கு நினைத்தது நிறைவேறும்?

இந்த 4 ராசிக்கு அதிர்ஷடம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒன்றிய வாரியாக நடப்படவுள்ள மரக்கன்றுகளின் எண்ணிக்கை:

  • உத்திரமேரூர் ஒன்றியம்: 82,500 மரக்கன்றுகள்
  • வாலாஜாபாத் ஒன்றியம்: 70,000 மரக்கன்றுகள்
  • திருப்பெரும்புதூர் ஒன்றியம்: 65,000 மரக்கன்றுகள்
  • குன்றத்தூர் ஒன்றியம்: 55,000 மரக்கன்றுகள்
  • காஞ்சிபுரம் ஒன்றியம்: 47,500 மரக்கன்றுகள்

155 கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் செறிவூட்டும் பணி & மக்கள் குறைகேட்பு

மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடர்ந்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பயன்பாடின்றி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் மூலம் செறிவூட்டும் (Recharge) பணியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்: 


முதற்கட்டமாக 155 கிணறுகள்: மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 155 ஆழ்துளைக் கிணறுகளில் திருப்பெரும்புதூர் (41), வாலாஜாபாத் (41), உத்திரமேரூர் (34), காஞ்சிபுரம் (26) மற்றும் குன்றத்தூர் (13) ஆகிய இடங்களில் செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொதுமக்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு: விழாவையடுத்து கிராம மக்களின் மின்சாரப் பிரச்சினை, வீட்டுமனைப் பட்டா மற்றும் பேருந்து வசதி தொடர்பான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர்கள், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திரு. ஆஷிக் அலி, இ.ஆ.ப., செயற்பொறியாளர் திரு. பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. ரங்கராஜன், திருமதி பவானி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments