“காஞ்சிபுரம் மண்டலத்தில் 258 பேருந்துகளுக்கு விரிவாக்கம்!” - ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் & ஆட்சியர் சினேகா!
காஞ்சிபுரம் | அக்டோபர் 02, 2026
258 பேருந்துகளாக உயர்வு - விரிவான புள்ளிவிவரங்கள்:
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் (சினேகா) ஆகியோர் கலந்துகொண்டு, காஞ்சிபுரம் மண்டலத்தின்கீழ் இயங்கும் 258 பேருந்துகளில் வெற்றிப் பயணத் திட்டத்தின் விரிவாக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
முந்தைய நிலை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகக் காஞ்சிபுரம் மண்டலத்தில் தினசரி நகரம் மற்றும் புறநகர்ப் பேருந்துகள் என மொத்தம் 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கனவே 123 நகரப் பேருந்துகளில் மட்டுமே மகளிர் இலவசப் பேருந்து சேவை நடைமுறையில் இருந்தது.
தற்போதைய விரிவாக்கம்: தற்போது ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 135 விரைவு மற்றும் புறநகச் சாதாரணப் பேருந்துகள் (Mofussil) சேர்க்கப்பட்டு, மொத்தம் 258 பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இனிப்புகள் & இலவசப் பயணச் சீட்டுகள் வழங்கல்:
விழாவில், விரிவாக்கம் செய்யப்பட்ட 'வெற்றிப் பயணம்' பேருந்துகளில் ஏறிய பெண் பயணிகளுக்குப் புதிய பயணச் சீட்டுகளை (Tickets) வழங்கிய அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் ஆட்சியர், பயணிகளுக்கும் பேருந்துப் பணியாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சார் ஆட்சியர் புவனேஸ்வராம், காவல்துறை துணைக் கோட்டக் கண்காணிப்பாளர் மணிவண்ணன், போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



No comments
Thank you for your comments