“1967, 1977, 1982, 2026!” - அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் வரிசையில் தான்.. பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி!
சென்னை | செப்டம்பர் 07, 2026
.jpg)
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்
2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுப் பாதியிலேயே ரத்து செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட முக்கியத் திட்டங்களைப் பேரவையில் முதல்வர் விஜய் பட்டியலிட்டார்:
சமூக நலத் திட்டங்கள்: தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம், இலவச ஆடு மற்றும் மாடுகள் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம்.
கல்வித் துறை: 4 1/2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி (Laptop) திட்டம் மற்றும் 'டாக்டர் ஜே. ஜெயலலிதா பல்கலைக்கழகம்'.
முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: விழுப்புரம் மாவட்டத்தில் ₹1,500 கோடி மதிப்பீட்டிலான கூனிமேடு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மற்றும் ₹235 கோடி மதிப்பீட்டிலான அழகன்குப்பம் மீன்பிடி துறைமுகத் திட்டம்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தாமதம் - அடுக்கடுக்கான வழக்குகள் சுட்டிக்காட்டு
கடந்த திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகச் சாடிய முதல்வர், ஆளுங்கட்சியினர் தவறு செய்தபோது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யத் தாமதிக்கப்பட்ட வழக்குகளைச் சுட்டிக்காட்டினார்.
"திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும்; தப்பு நடக்கும் இடத்தில் தான் திமுகவே இருக்கும்! ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கிறார்களே தவிர, நாங்கள் ஊழலே செய்யவில்லை என்று கூற திமுகவினருக்குத் துணிவில்லை."
— முதலமைச்சர் விஜய்
கடலூர் எம்.பி விவகாரம்: கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி. ரமேஷிற்குச் சொந்தமான ஆலையில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் கடும் கண்டனத்திற்குப் பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விருதுநகர் பாலியல் சம்பவம்: திமுக நிர்வாகிகள் சிலர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டில் கடும் விமர்சனங்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் பெண் காவலர் விவகாரம்: 2022 டிசம்பரில் பெண் காவலரிடம் அத்துமீறிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல், எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகே கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை & பல்லாவரம் சம்பவங்கள்: திருவண்ணாமலையில் பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக நிர்வாகி தப்பிக்க உதவியது மற்றும் பல்லாவரத்தில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ மகன் இல்லத்தில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் செய்யப்பட்டது.
“1967, 1977, 1982, 2026!” - வரலாற்று வருடங்களைக் குறிப்பிட்ட முதல்வர்
தனது உரையின் நிறைவாக, தமிழக மற்றும் தென்னிந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் எழுச்சி பெற்ற வருடங்களைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் விஜய்:
"1967, 1977, 1982 மற்றும் 2026.. பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் விஜய் ஆகியோரின் வழியில் மக்கள் ஆதரவும் இயற்கையும் எங்கள் பக்கமே உள்ளது. நான் நாற்காலிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ வரவில்லை; மக்களுக்கு நல்லது செய்யவும், அவர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் செலுத்தவுமே அரசியலுக்கு வந்துள்ளேன்!"
— முதலமைச்சர் விஜய்
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு என்றும், மக்களின் நம்பிக்கையைப் பெறக் கட்டமைக்கப்படும் போலியான பிம்பங்களையும் பிராண்டுகளையும் தோண்டித் துருவி உடைப்போம் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

No comments
Thank you for your comments