Breaking News

என் செல்ல மகனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்... இறைவனின் அருளோடு 22-வது வயதில் காலடி வைக்கும் அன்பு மகன் சாய் கிருஷ்ணன் 💐 என்றும் அம்மா...

இன்று செப்டம்பர் 8 – உலகமும் கொண்டாடும்,

எழுத்தறிவு, வீரநலம், ஆன்மீக சிறப்பு நினைவூட்டும்.

அந்தச் சிறப்பு நாளில் பிறந்த உன் வாழ்வு,

அதே ஒளியுடன் என்றும் பிரகாசிக்கட்டும்! 🌞✨ 


என் கருவறை வரமே!

உன் முதல் அழுகை கேட்ட அந்த நொடியில்,
என் தாய்மை முழுமை பெற்றதடா!
விரல் பிடித்து நீ நடந்த பாதையெல்லாம்,
என் விழிகள் உன்னையே தொடர்ந்ததடா!

இருபத்திரண்டு ஆண்டுகள் ஓடிய பின்பும்,
என் மடி சாயும் குழந்தை தான் நீ எனக்கு!
உன் சிறு புன்னகை சிந்தும்தோறும்,
என் கவலைகள் யாவும் பறக்குதடா!

'கண்ணன்' எனும் பெயரோடு நீ சிரித்தால்,
என் உலகம் முழுவதும் ஒளிருதடா!
உன் கனவுகள் யாவும் கைகூட,
என் ஒவ்வொரு மூச்சும் வாழ்த்து தட!

அறிவிலும் புகழிலும் நீ சிறந்து,
அன்பிலும் பண்பிலும் உயர்ந்து நிற்க,
இறைவனின் அருளோடு நூறாண்டு வாழ்க,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,
என் அன்பு மகனே சாய் கிருஷ்ணன்!

No comments

Thank you for your comments