காஞ்சிபுரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! கூடுதல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்!
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓரிக்கை பகுதியில் உள்ள காஞ்சி தெற்கு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்:
- காலி மதுபாட்டில்களை பெறும் பணிக்கு தனி பணியாளர்கள் நியமிக்க வேண்டும்
- இல்லையெனில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
- மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கும் தனி பணியாளர்கள் நியமிக்க வேண்டும்
- கடைகளுக்குத் தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும்
- ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கக் கூடாது
ஊழியர்களின் போராட்டத்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
பேட்டி:
🎤 சிவா – டாஸ்மாக் ஊழியர்
🎤 பார்த்திபன் – டாஸ்மாக் ஊழியர்
No comments
Thank you for your comments