Breaking News

“சிமெண்ட் லாரி மோதிப் பரிதாபம்!” - சேத்தியாத்தோப்பு அருகே பைக் விபத்தில் 3 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி!

 சேத்தியாத்தோப்பு | ஆகஸ்ட் 28, 2026

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பைக் மீது சிமெண்ட் லோடு லாரி மோதிய கோர விபத்தில், மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 கோர விபத்து நடந்தது எப்படி?

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்:

  • சுபக்கண்ணன் (19) - த/பெ. சுப்ரமணியன்
  • வினோத் (18) - த/பெ. சுதாகர்
  • சூரியா (18) - த/பெ. செல்வம்

நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் பல்சர் பைக்கில் காவாலக்குடியிலிருந்து வடலூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இரவு 9:00 மணியளவில், வி.கே.டி. பைபாஸ் சாலையில் உள்ள ஆணைவாரி வளைவுப் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்ட் லோடு லாரி (TN 52 F 5244) எதிர்பாராதவிதமாக பைக் மீது பலமாக மோதியது.

சம்பவ இடத்திலேயே பலி & டிரைவர் ஓட்டம்:

இந்தக் கோர மோதலில் பைக்கில் சென்ற சுபக்கண்ணன், வினோத், சூரியா ஆகிய 3 பேரும் லாரியின் சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடனேயே லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் நடவடிக்கை:

விபத்து குறித்துத் தகவலறிந்த சேத்தியாத்தோப்பு காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த 3 இளைஞர்களின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் காவாலக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments