Breaking News

கர்ப்ப காலத்தில் அதிக எடையுடன் உடற்பயிற்சி செய்யும் சமந்தா

நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து வருகிறார். தனது கர்ப்ப காலப் பயணம், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிடிமோருவுடன் மேற்கொண்ட பேபிமூன் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தருணங்களை அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களைப் பயன்படுத்தி பயிற்சி செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அதிக எடையுடன் கூடிய பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவும் நிலையில், அவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மருத்துவர் ஆலோசனையுடன் உடற்பயிற்சி

இதுகுறித்து சமந்தா கூறுகையில், தான் பல ஆண்டுகளாக எடைப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், கர்ப்ப காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய தனது மருத்துவரின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சிறப்பு சான்றிதழ் பெற்றவர் என்றும், தனது உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்திற்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

மற்றவர்கள் பின்பற்ற வேண்டாம்

ஒவ்வொருவரின் கர்ப்ப கால அனுபவமும் உடல்நிலையும் மாறுபடும் என்பதால், தனது உடற்பயிற்சி முறையை மற்ற கர்ப்பிணிப் பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவர் மற்றும் தகுதியான உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் மட்டுமே கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவரது பதிவு வலியுறுத்துகிறது.

No comments

Thank you for your comments