Breaking News

“பால்நல்லூர் அருகே புதிய தொழிற்சாலை அமைக்கக் கூடாது!” - ஊர்ப் பொதுமக்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்சியரிடம் மனு!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 17, 2026

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பால்நல்லூர் ஊராட்சியில் பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் புதிதாகத் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, பால்நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் நேரு தலைமையில் ஊர்ப் பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி. தி. சினேகா, இ.ஆ.ப. அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

இயங்கி வரும் தொழிற்சாலையால் பாதிப்பு:

பால்நல்லூர் ஊராட்சியில் ஏற்கனவே ‘ஸ்பின்ஸ் ஷாப்டெக்’ (Spins Shoptech) என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து தொடர்ச்சியாக நச்சுப் புகையும், கடுமையான துர்நாற்றமும் வெளியேறுவதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2-வது தொழிற்சாலைக்கு எதிர்ப்பு:

இந்நிலையில், அதே தனியார் நிறுவனம் சார்பில் பால்நல்லூர் கிராமப் பகுதியை ஒட்டி 2-வது புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

சுகாதாரச் சீர்கேடு அபாயம்:

ஏற்கனவே இயங்கி வரும் ஆலையாலேயே மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், புதிய தொழிற்சாலையும் செயல்பாட்டுக்கு வந்தால் நச்சுப் புகையின் அளவு மேலும் அதிகரித்து, கிராம மக்களின் உடல்நலம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை:

கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பால்நல்லூர் அருகே அமைக்கப்பட்டு வரும் புதிய தனியார் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்றத் தலைவர் நேரு மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

No comments

Thank you for your comments