Breaking News

"அரசுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றம்!" - காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் 11-வது மாநில மாநாடு கோலாகலம்!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 06, 2026

காஞ்சிபுரம் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் 11-வது மாநில மாநாடு காஞ்சிபுரம் எம்.எம். அவென்யூவில் உள்ள ஏ.கே.ஜி. திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காதுகேளாதோர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு:

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலரும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்:

  • தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு (சென்னை): தலைவர் ஆர். பழனிச்சாமி, பொதுச் செயலாளர் ஜி. ஜெய்சங்கர்
  • தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சில்: தலைவர் ஏ.ஆர். இளமாறன், பொதுச் செயலாளர் ஏ. பொன்னுசாமி
  • தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க சங்கம்: தலைவர் ஜி. சுப்பிரமணி, பொதுச் செயலாளர் சுதர்சன் குமார்
  • தமிழ்நாடு காதுகேளாதோர் மகளிர் சங்கம்: தலைவர் எம். பாக்கியா, பொதுச் செயலாளர் எஸ். கவிதா
  • மாவட்ட சிறப்பு விருந்தினர்கள்: காஞ்சிபுரம் பட்டைய கணக்காளர் ஜெய்சங்கர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.என். ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மாணிக்கவாசகம்.




அரசுக்கு முக்கியத் தீர்மானங்கள்:

இம்மாநாட்டில் காதுகேளாதோர் நலன், வாழ்வாதார மேம்பாடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சலுகைகள் சார்ந்த பல்வேறு முக்கியமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்து ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறப்பான ஏற்பாடுகள்:

இந்த பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்புக் கமிட்டித் தலைவர் பி.எஸ். சந்தோஷ் குமார், துணைத் தலைவர்கள் கே. பலராமன், பி. ஜெயச்சந்திரன், இ. ஜெயவேல், செயலாளர் என்.ஜே. கோபி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.


ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2026
உச்ச குரு + புதாதித்ய யோகம்!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 3 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

No comments

Thank you for your comments