Breaking News

“காஞ்சிபுரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிர ஆய்வு!” - பள்ளி, திருமண மண்டபம், அருங்காட்சியகப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சினேகா!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 11, 2026

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி.சினேகா, இ.ஆ.ப. அவர்கள் இன்று (11.08.2026) நேரில் சென்று பார்வையிட்டுத் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.


ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

1. ஓரிக்கை சிறப்புப் பள்ளியில் ஆய்வு:

ஓரிக்கையில் இயங்கி வரும் செவித்திறன் குறைபாடுகளுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 36 மாணவர்களின் தங்கும் விடுதி வசதிகள், சமையற்கூடம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை ஆட்சியர் பார்வையிட்டார். பள்ளிக்குத் தேவைப்படும் கூடுதல் வசதிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

2. ₹8.77 கோடியில் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அருகில் ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் தரை, முதல் மற்றும் இரண்டாம் தளங்களுடன் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபப் பணிகளை ஆய்வு செய்தார். 

கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்த ஆட்சியர், மாநகராட்சி சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

3. ₹2 கோடியில் அரசு அருங்காட்சியகச் சீரமைப்பு:

தற்போது ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தை, ஒலிமுகமதுபேட்டையில் உள்ள "யாத்ரி நிவாஸ்" கட்டிடத்திற்கு மாற்றும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான மற்றும் மின்சாரப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.

4. கோவிந்தவாடியில் ₹6.87 கோடியில் பள்ளி கட்டடம்:

கோவிந்தவாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுக் சுவருடன் கட்டப்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிப் பணிகளை ஆய்வு செய்தார். ஸ்மார்ட் போர்டு அமைக்கப்படும் வகுப்பறைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியர், இன்னும் 2 வாரத்திற்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து ஒப்படைக்க உத்தரவிட்டார்.

5. 125 நாள் வேலை திட்டம் & மக்கள்தொகைக் கணக்கெடுப்பு:

  • கீழம்பி பஞ்சாயத்து: VB-G RAM-G 125 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டு, தொழிலாளர்களின் சம்பள விவரங்கள் மற்றும் செயலியில் பணி அட்டைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
  • வீடு வீடாக ஆய்வு: கீழம்பி பகுதியில் வீடு வீடாகச் சென்று நடைபெற்று வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு களப் பணியாளர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது உடனிருந்த அலுவலர்கள்:

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் மோகன், மாநகராட்சி ஆணையர் இரா. வினோத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, அருங்காட்சியகக் காப்பாளர் உமாசங்கர், உதவி செயற்பொறியாளர்கள் தமிழரசி, தேவி சரஸ்வதி, இளையராஜா, இளநிலை மறுவாழ்வு அலுவலர் ஆஷா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments