Breaking News

“கிராமங்களுக்கே வரும் அரசு!” - ஆகஸ்ட் 12-ல் மல்லியங்கரணையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா அறிவிப்பு!

காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 07, 2026

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கில், வருவாய்த் துறையின் சார்பில் நடத்தப்படும் "மக்கள் தொடர்பு திட்ட முகாம்" (Mass Contact Programme) வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மல்லியங்கரணை-அ கிராமத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி.சினேகா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.


ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

முகாம் நடைபெறும் விவரங்கள்:

  • வட்டம்: உத்திரமேரூர்
  • கிராமம்: மல்லியங்கரணை-அ
  • நாள் & நேரம்: 12.08.2026 (புதன்கிழமை), காலை 10.00 மணி முதல்
  • இடம்: பிரியா திருமண மஹால் அருகில், மல்லியங்கரணை-அ

உடனடி சேவை & தீர்வுகள்:

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளார்.

இம்முகாமில்:

  1. பட்டா மாறுதல் (Patta Transfer) தொடர்பான மனுக்கள்
  2. பல்வேறு சான்றிதழ்கள் (Certificates)
  3. அரசின் நலத்திட்ட உதவிகள் (Welfare Schemes)

உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. எனவே, உத்திரமேரூர் மற்றும் மல்லியங்கரணை-அ பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments

Thank you for your comments