“முதலமைச்சர் கோப்பை – 2026!” - ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவிப்பு!
காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 11, 2026
இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ள புதிய விளையாட்டுகள்:
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்யிங் (Kayaking), கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளன.
யாரெல்லாம் பங்கேற்கலாம்? (பிரிவுகள் & வயது வரம்பு):
- பள்ளி மாணவர்கள்: 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்டோர் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்).
- கல்லூரி மாணவர்கள்: 25 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்).
- பொதுப்பிரிவினர்: 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுமக்கள்.
- மாற்றுத்திறனாளிகள்: அனைத்து வயதுடைய மாற்றுத்திறனாளிகள்.
- அரசு ஊழியர்கள்: அனைத்து வயதுடைய அரசுப் பணியாளர்கள்.
பரிசுத் தொகை விவரங்கள்:
| போட்டி நிலை | 1-ஆம் பரிசு | 2-ஆம் பரிசு | 3-ஆம் பரிசு |
| மாவட்ட / மண்டல அளவு (தனிநபர்) | ₹3,000 | ₹2,000 | ₹1,000 |
| மாநில அளவு (தனிநபர்) | ₹1,00,000 | ₹75,000 | ₹50,000 |
| மாநில அளவு (குழுப் போட்டிகள் - தலா) | ₹75,000 | ₹50,000 | ₹25,000 |
விண்ணப்பிக்கும் முறை & தொடர்பு விவரம்:
- இணையதளம்: விருப்பமுள்ளவர்கள்
என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது தங்கள் பள்ளி/கல்லூரிகள் மூலமாகவோ 31.08.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.tncmtrophy.sdat.in
- தொடர்பு எண்: கூடுதல் விவரங்களுக்குக் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


No comments
Thank you for your comments