Breaking News

“100 நாளில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்!” - தவெக ஆட்சியைச் சாடி அப்பாவு எக்ஸ் (X) தளத்தில் காரசாரம்!

சென்னை | ஆகஸ்ட் 18, 2026

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அரசின் சாதனைகளாக முதல்வர் விஜய் தரப்பில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், முன்னாள் சபாநாயகரும் திமுக மூத்த தலைவருமான அப்பாவு தமது சமூக வலைதளப் பக்கத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 அப்பாவுவின் குற்றச்சாட்டுகள்:

தவெக தலைவர் விஜய் அவர்களை நேரடியாகக் குறிப்பிட்டு அப்பாவு வெளியிட்டுள்ள பதிவின் முக்கிய அம்சங்கள்:

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: 

தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 100 நாட்களில் மாநிலத்தில் சுமார் 200 கொலைகள், 10-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.


காவல்நிலைய மரணங்கள்: 

தேர்தல் அறிக்கையில் "ஒவ்வொரு காவல்நிலைய மரணமும் அந்த ஆட்சியின் தோல்வி" எனக் கூறியதை நினைவுகூர்ந்த அவர், கடந்த 100 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சாடியுள்ளார்.

திரைமறைவு ஆட்சி: 

"முதல்வரைச் சுற்றியுள்ள 4 நண்பர்களும் இயக்குநர்களாக மாறி, விஜய்யை வைத்து ரீல்ஸ் எடுத்து சீரியல் தயாரித்து, ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். வாக்களித்த மக்களை ரீல்ஸ் பார்க்க வைத்திருப்பது அவமானம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



மாணவர்கள் கொலை விவகாரம்: 

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அமுதன், தினேஷ் உள்ளிட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முதல்வர் நேரடியாக நாட்டு மக்களுக்குப் பதிலளிக்காமல் 'டூப்'களைப் பேச வைத்து ஓடி ஒளிவதாகச் சாடியுள்ளார்.

No comments

Thank you for your comments