Breaking News

காஞ்சிபுரம்: TNTJ சார்பாகப் பெண்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் - முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்த முதல்வர் விஜய்க்குத் தீர்மானம் மூலம் கோரிக்கை!

 காஞ்சிபுரம் | ஜூலை 19, 2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாகப் பட்டூரில் உள்ள ரஹ்மான் மஹாலில், பெண்களுக்கான 'இஜ்திமா' எனும் பிரம்மாண்ட நல்லொழுக்கப் பயிற்சி முகாம் இன்று (19.07.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது, முஸ்லிம்களின் உள்ஒதுக்கீட்டை உயர்த்துவது உள்ளிட்ட 5 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுத் தவெக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அண்ணல் நபியின் வழியில் பெண்களுக்கான இஜ்திமா:

"அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி" என்ற 10 மாத காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, "பெண்ணுரிமை போற்றிய நபிகள் பெருமானார்" என்ற ஜூலை மாதத் தலைப்பில் இந்த முகாம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முஹம்மது அக்ரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இஸ்லாமிய வாழ்வியல் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரையாற்றினர்:

  • முஹம்மது அக்ரம் (மாவட்டத் தலைவர்): "பெண்ணுரிமை போற்றும் பெருமானார்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
  • ஆசியா ஆலிமா (TNTJ பேச்சாளர்): "இஸ்லாத்தின் பார்வையில் அலங்காரம்" என்ற தலைப்பில் பெண்களுக்கான ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கினார்.
  • மைதீன் MISC & M.A.அப்துர் ரஹ்மான் MISC (மாநிலப் பேச்சாளர்கள்): "குடும்பத்தைக் கட்டமைக்கும் இஸ்லாம்", "இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு", "ஒழுக்கத்தைப் பேணுவோம்", மற்றும் "பிறர் நலம் நாடுவோம்" ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய அதிரடித் தீர்மானங்கள்:

இந்த நல்லொழுக்கப் பயிற்சி முகாமின் நிறைவாக, சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த 5 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

  1. பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: பெண்களின் பாதுகாப்பைத் துரிதமாக உறுதி செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
  2. 7% முஸ்லிம் உள்ஒதுக்கீடு: முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குக் கோரிக்கை.
  3. தேசிய பாடல் மசோதாவிற்கு எதிர்ப்பு: வந்தே மாதரம் பாடலைத் தேசியப் பாடலாகப் பாட மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய மசோதாவிற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தல்.
  4. மாட்டிறைச்சி அரசியலுக்குக் கண்டனம்: தமிழக மண்ணில் தேவையின்றிச் செய்யப் பட்டு வரும் மாட்டிறைச்சி அரசியலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தல்.
  5. மதம் மாறியவர் உரிமைப் பாதுகாப்பு: இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறியவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு:

பெண்களின் ஒழுக்க மேம்பாட்டிற்காக நடத்தப்பட்ட இந்த மாபெரும் பயிற்சி முகாமில் காஞ்சி மாவட்டச் செயலாளர் அஷ்ரஃப் அலி, மாவட்டப் பொருளாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments