Breaking News

காஞ்சிபுரத்தில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை! - வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி!


 காஞ்சிபுரம் | ஜூலை 21, 2026

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகக் கடும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் இன்று திடீரெனப் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

திடீர் கனமழை - வாகன ஓட்டிகள் தவிப்பு:

கடந்த மூன்று மாதங்களாகவே சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆங்காங்கே பெய்த மழை சற்று ஆறுதல் அளித்து வந்தது.

 

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் மிதமாகவே காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணி அளவில் காஞ்சிபுரம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, தொடர்ச்சியாக சுமார் 15 நிமிடங்கள் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த எதிர்பாராத திடீர் மழையால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நனையாமல் இருக்க ஆங்காங்கே தங்களின் வாகனங்களை நிறுத்தி நிழற்கூரைகளின் கீழ் ஒதுங்கி நின்றனர்.

வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை:

திடீரெனப் பெய்த இந்த கனமழையின் காரணமாக நகரில் நிலவி வந்த காங்கை மற்றும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் தணிந்தது. மழையைத் தொடர்ந்து இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால், கோடை வெயிலால் தவித்து வந்த காஞ்சிபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.

No comments

Thank you for your comments