108 ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவம் பார்த்த ஊழியர்கள்: புத்தகம் வழங்கி பாராட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா!
காஞ்சிபுரம் | ஜூலை 30, 2026
இக்கூட்டத்தில், அவசர காலத்தில் திறம்படச் செயல்பட்டு உயிர்காக்கும் பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி. சினேகா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி கௌரவித்தார்.
சம்பவத்தின் பின்னணி & ஆட்சியரின் பாராட்டு:
பிரசவ அவசர சிகிச்சைக்காகக் கர்ப்பிணித் தாய்மார்களை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே, எதிர்பாராதவிதமாக தாய்மார்களுக்குப் பிரசவ வலி அதிகமானது.
அச்சமயத்தில் பதற்றமடையாமல், 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தாய்மார்களுக்குப் பாதுகாப்பாகச் சுகப்பிரசவம் (Normal Delivery) செய்துள்ளனர்.
புத்தகம் வழங்கி கௌரவிப்பு:
அவசர காலத்தில் உடனடியாகச் செயல்பட்டுத் தாயையும் சேயையும் நலமாக மீட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவச் செவிலியர்கள் (EMT) மற்றும் வாகன ஓட்டுநர்களின் (Pilots) சிறந்த சேவையைப் பாராட்டி, மாவட்ட ஆட்சியர் தி. சினேகா அவர்கள் தகுந்த புத்தகங்களை பரிசாக வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்:
மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறைப் பணிகள் குறித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தின் முன்னணி மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்:
- மரு. எம். ஹிலாரினா ஜோசிட்டா நளினி - இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்)
- மரு. த.ரா. செந்தில் - மாவட்ட சுகாதார அலுவலர்
- மரு. மகேஸ்வரி - துணை இயக்குநர் (குடும்ப நலம்)
- மரு. டி. கனிமொழி - துணை இயக்குநர் (தொழுநோய்)
- மரு. காளீஸ்வரி - துணை இயக்குநர் (காசநோய்)
மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி ஊக்கவிப்பும் பாராட்டுகளும் மருத்துவத் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments