Breaking News

உடல் பருமனால் 13 வகையான புற்றுநோய் வர அபாயம்: காஞ்சிபுரத்தில் அப்போலோ மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜ் பழனியப்பன் எச்சரிக்கை!


 காஞ்சிபுரம் | ஜூலை 26, 2026

உடல் பருமன் கோளாறுகளால் மார்பகம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட குறைந்தது 13 வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனச் சென்னை அப்போலோ பேரியாட்ரிக்ஸ் மைய இயக்குநரும் முதன்மை அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாக்டர் ராஜ் பழனியப்பன் எச்சரித்துள்ளார்.


காஞ்சிபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் உடல் பருமன் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்குத் தலைமை தாங்கிய சென்னை அப்போலோ பேரியாட்ரிக்ஸ் மைய இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ராஜ் பழனியப்பன், உடல் பருமனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, நோய் குறித்த விழிப்புணர்வு, நவீன சிகிச்சை முறைகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இம்முகாமில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்:

முகாமிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ் பழனியப்பன் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:

  • அதிகரிக்கும் உயிரிழப்புகள்: "உலகம் முழுவதும் உடல் பருமன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் 60 சதவீத மக்கள் உடல் பருமன் மற்றும் அதன் சார்புடைய நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்தியாவில் நான்கில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
  • மருந்துகள் vs பேரியாட்ரிக் சிகிச்சை: மருந்துகள் மூலம் பொதுவாக 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே எடையைக் குறைக்க முடியும். ஆனால், அதிக எடையால் அவதிப்படும் சில நோயாளிகளுக்கு நவீன பேரியாட்ரிக் (Bariatric) அறுவை சிகிச்சை மட்டுமே சிறந்த தீர்வாக அமையும்.
  • ரோபோட்டிக் தொழில்நுட்பம்: தற்போது வந்துள்ள அதிநவீன ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால், நோயாளிகள் எவ்வித பயமுமின்றி விரைவாகக் குணமடைந்து வீடு திரும்ப முடியும்.
  • 13 வகை புற்றுநோய் அபாயம்: உடல் பருமன் காரணமாக மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உட்படக் குறைந்தது 13 வகையான புற்றுநோய்கள் வருவதற்கான அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது."

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2026:
மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்!

உச்ச குருவின் பார்வையால் குவியப்போகும் அசுர நற்பலன்கள்! உங்க ராசிக்கு என்ன பலன்? - ஆடிமாதம் சூரி+குரு சேர்க்கை

 

குழந்தைகளுக்கான ஆரோக்கியப் பழக்கம்:

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் கற்றுத் தருவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், உடல் பருமனின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பொது மருத்துவர் டாக்டர் நிகிலேஷ் கிருஷ்ணா, ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் மரியா மற்றும் காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments