காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க CUMTA தீவிர ஆய்வு: 100 கணக்கெடுப்பாளர்கள் களத்தில்!
காஞ்சிபுரம் :
இதனைக் கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக் குழுமம் (KLPA), காஞ்சிபுரம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து, நகரின் முக்கிய 5.5 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்திடம் (CUMTA) தொழில்நுட்ப ஆய்வு நடத்தக் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வு மேற்கொள்ளப்படும் முக்கிய சாலைகள்:
சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) காஞ்சிபுரம் நகரின் பின்வரும் 6 முக்கியச் சாலைகளில் கள ஆய்வை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது:
- காந்தி சாலை
- வள்ளல் பச்சையப்பன் தெரு (கீரை மண்டபம் முதல் பேருந்து நிலையம் – காமராஜர் சாலை வரை)
- நெல்லுக்காரத் தெரு
- கிழக்கு மற்றும் மேற்கு ராஜவீதிகள்
- செங்கழுநீரோடைத் தெரு
- விளக்கடி கோயில் தெரு
16 மணி நேர வாகன நிறுத்த ஆய்வு (Parking Survey):
சாலையிட ஒதுக்கீடு (Road Space Allocation), போக்குவரத்து மேலாண்மை, வாகன நிறுத்த மேலாண்மை மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
- 100 கணக்கெடுப்பாளர்கள்: வாகன நிறுத்தத் தேவைகளைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காகத் தொடர்ந்து 16 மணி நேரம் நடைபெறும் விரிவான கள ஆய்வை CUMTA தொடங்கியுள்ளது. இதற்காக 2 நாட்களில் சுமார் 100 பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
- டிஜிட்டல் தரவு சேகரிப்பு: CUMTA உருவாக்கிய சிறப்பு மொபைல் தரவு சேகரிப்பு செயலியைப் பயன்படுத்தி (Mobile Data Collection App), வாகன நிறுத்தத் தேவை, வாகனங்கள் நிறுத்தப்படும் கால அளவு, வாகனங்களின் வரவு-செலவு சுழற்சி (Turnover) மற்றும் வாகன நிறுத்தப் பழக்கவழக்கங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத் திட்டமிடுதல் & பயன்கள்:
இந்த ஆய்வின் முடிவுகள், காஞ்சிபுரம் நகருக்கான முழுமையான சாலைப் பரப்புப் பயன்பாட்டுத் திட்டம் (Road Space Allocation Plan) தயாரிக்க முக்கிய அடிப்படையாக அமையும்.
மேலும், இதன் பரிந்துரைகள் மூலம் காஞ்சிபுரம் நகரில் பாதுகாப்பான, திறமையான மற்றும் நெரிசலற்ற நிலையான நகரப் போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
.jpg)
No comments
Thank you for your comments