Breaking News

தமிழக அமைச்சரவை அதிரடி விரிவாக்கம்: 59 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் காங்கிரஸ்! 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

 சென்னை | மே 21, 2026

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 23 புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ள நிலையில், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக ஆட்சியில் நேரடியாகப் பங்கேற்கிறது.


ஆட்சிப் பின்னணி மற்றும் கூட்டணி:

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டதால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM), விசிக (VCK), மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளின் பேராதரவுடன் கடந்த மே 10-ஆம் தேதி விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சட்டப்பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் உண்டா? என்ற விவாதங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

59 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுச் சாதனை:

தமிழகத்தில் கடந்த 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெறாமல் இருந்து வந்தது. தற்போது 59 ஆண்டுகள் கழித்து, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலின்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான செ. ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) மற்றும் பெ. விஸ்வநாதன் (மேலூர்) ஆகிய இருவர் விஜய்யின் அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர். 

இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது 'X' தளத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பதவியேற்க உள்ள 23 புதிய அமைச்சர்களின் முழுப் பட்டியல்:

ஆளுநர் மாளிகையில் இன்று திரண்டுள்ள புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்கள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் விவரம்:

  1. ஸ்ரீநாத் – தூத்துக்குடி எம்.எல்.ஏ
  2. எஸ். கமலி – அவிநாசி எம்.எல்.ஏ
  3. சி. விஜயலக்‌ஷமி – குமாரபாளையம் எம்.எல்.ஏ
  4. ஆர்.வி. ரஞ்சித் குமார் – காஞ்சிபுரம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்
  5. வினோத் – கும்பகோணம் எம்.எல்.ஏ
  6. ராஜீவி – திருவாடானை எம்.எல்.ஏ
  7. பி. ராஜ்குமார் – கடலூர் எம்.எல்.ஏ
  8. வி. காந்திராஜ் – அரக்கோணம் எம்.எல்.ஏ
  9. மதன்ராஜ். பி – ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ
  10. ஜெகதீஸ்வரி. கே – ராஜபாளையம் எம்.எல்.ஏ
  11. ராஜேஷ்குமார். எஸ் – கிள்ளியூர் எம்.எல்.ஏ (காங்கிரஸ்)
  12. விஜய்பாலாஜி. எம் – ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ
  13. லோகேஷ் தமிழ்செல்வன். டி – ராசிபுரம் எம்.எல்.ஏ
  14. விஜய் தமிழன் பார்த்திபன். ஏ – சேலம் தெற்கு எம்.எல்.ஏ
  15. ரமேஷ் – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ
  16. பி. விஸ்வநாதன் – மேலூர் எம்.எல்.ஏ (காங்கிரஸ்)
  17. குமார். ஆர் – வேளச்சேரி எம்.எல்.ஏ
  18. தென்னரசு. கே – ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ
  19. சம்பத்குமார். வி – கோவை வடக்கு எம்.எல்.ஏ
  20. முகமது ஃபர்வாஸ். ஜே – அறந்தாங்கி எம்.எல்.ஏ
  21. டி. சரத்குமார் – தாம்பரம் எம்.எல்.ஏ
  22. மரிய வில்சன் – ராதாகிருஷ்ணன் நகர் (R.K. நகர்) எம்.எல்.ஏ
  23. விக்னேஷ். கே – கிணத்துக்கடவு எம்.எல்.ஏ

புதிய அமைச்சர்கள் அனைவருக்கும் ஆளுநர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 

இந்த விரிவாக்கத்தின் மூலம் அனைத்துப் பிராந்தியங்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, ஒரு வலுவான கூட்டணி அரசு தமிழகத்தில் அமையப் பெற்றுள்ளது.

No comments

Thank you for your comments