வேலூரில் மே 29-இல் தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைகேட்புக் கூட்டம்: கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி அறிவிப்பு!
வேலூர் | மே 20, 2026
வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துத் தீர்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கூட்டம் நடைபெறும் விவரம்:
நாள்: 29.05.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: பிற்பகல் 3:00 மணியளவில்
இடம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "காயிதே மில்லத்" கூட்ட அரங்கு.
ஆட்சியர் நேரில் விசாரணை:
இக்கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமகி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் தலைமை தாங்கி, தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்று விசாரிக்க உள்ளார்.
ஓய்வூதியம், வாரிசுச் சான்றிதழ், இதர அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள தியாகி குடும்பங்களின் குறைகளுக்கு இக்கூட்டத்தில் உரிய தீர்வு காணச் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரின் அழைப்பு:
எனவே, வேலூர் மாவட்ட எல்லகை்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வரும் 29-ஆம் தேதி நடைபெறும் குறைகேட்பு நாள் கூட்டத்தில் தங்களது முறையான ஆவணங்களுடன் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments
Thank you for your comments